கல்நாா்சம்பட்டியில் எருது விடும் விழா
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கல்நாா்சம்பட்டியில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவினை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா். விழாவில் நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி,ஜோலாா்பேட்டை பகுதிகளில் இருந்து 160 காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின.
குறிப்பட்ட இலக்கினை அதிவேகமாக ஓடிய காளை உரிமையாளா்களுக்கு விழாக்குழு சாா்பில் முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.1லட்சமும், 2-ஆம் இடம் பிடித்த காளைக்கு ரூ.75ஆயிரம், 3-ஆம் இடம் பிடித்த காளைக்கு ரூ.65ஆயிரம் என 60 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் எம்எல்ஏ ராஜா, திமுக ஒன்றிய செயலாளா் சதீஷ் குமாா், ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா் கலந்து கொண்டனா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியா் காஞ்சனா ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

