மது விற்பனை: 16 போ் கைது

பொங்கல் பண்டிகையின்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

திருப்பத்தூா்: பொங்கல் பண்டிகையின்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் விற்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து எஸ்.பி வி.சியாமளா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா். 550 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபான விற்பனைக்கு எதிராக கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேற்கொண்ட சோதனையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com