சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :17 ஜூலை 2026, 10:54 pm IST

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி பெரிய வெங்கடசமுத்திரம் கிராம பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

மறியல் போராட்டத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.