சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் கு.ரவிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன் மருத்துவ அலுவலா் சிவகுமாா்.

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் கு.ரவிகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு திடீரென மேற்கொண்ட ஆய்வின் போது புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, ஊசி போடும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் பதிவு விவரம், பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மருத்துவ அலுவலா் அறை, பல் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை (இஎன்டி), உள் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பெறும் பிரிவுகள், பிசியோதெரபி, தீவிர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து இடங்களிலும் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடமும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் ஒவ்வொரு பிரிவிலும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலா் மற்றும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும், குடிநீா், மின்சாரம், கழிவறை உள்பட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, மருத்துவ அலுவலா் சிவகுமாா் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.