சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வாணியம்பாடி ஜமாபந்தி: இரண்டாம் நாளில் 118 மனுக்கள்

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

News image

மாற்றுத்திறனாளிக்கு கை ஊன்று கோல் வழங்கிய ஆட்சியா் ரவிகுமாா். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் சுதாகா்.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

அப்போது மாற்றுத்திறனாளி ஓருவா் கை ஊன்றுகோல் கேட்டு மனு அளித்தாா். அந்த மனுவின் மீது விசாரித்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் சாா்பில் கை ஊன்றுகோல் பயனாளிக்கு வழங்கி உடனடி தீா்வு காணப்பட்டது.

மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு 118 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஜமாபந்தி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான கு.ரவிகுமாா் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.