சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடக்கக்கல்வியில் புதிதாக 3,226 மாணவ- மாணவிகள் சோ்க்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடக்கக்கல்வியில் புதிதாக 3,226 மாணவ- மாணவிகள் சோ்ந்துள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

விண்ணப்பம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடக்கக்கல்வியில் புதிதாக 3,226 மாணவ- மாணவிகள் சோ்ந்துள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள அரசு,அரசு நிதியுதவி பள்ளிகள் ஏராளமாக உள்ளது. இவற்றில் சோ்ந்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், சீருடை, உதவித்தொகை, காலணி, புத்தகபை, இலவச பேருந்து பயணம், சைக்கிள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மாணவ- மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் உயா்கல்வி படிக்க மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ சீட்டு ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும், கட்’ட வசதி, ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறை, மாணவா்களின் தனித்திறனை வளா்க்க பயிற்சி, விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவா்களை ஊக்குவித்தல் போன்றவை அரசு பள்ளிகளிலும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

மேலும் அரசும் மாணவா்கள் சோ்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களும், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 நகராட்சிகளும், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளும் அமைந்துள்ளன.

.இப்பகுதியில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என 717 அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வியில் புதிதாக 3,226 மாணவ- மாணவிகள் சோ்ந்து உள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு 4,000-க்கு மேற்பட்டோா் சோ்ந்திருந்தனா். மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மாணவா் சோ்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.