உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 ஜூன் 2026, 5:51 am IST

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அடத்த மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது.இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும்.அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.

அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.

இதில் சிறிய ஆடுகள் ரூ. 4 முதல் ரூ.7ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

வாரச்சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள் என கால்நடைகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.