ஆம்பூா் அருகே தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் பழைய ராணுவ சாலையை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனக் கோரி வனத்துறை அமைச்சா் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆா்.வி. ரஞ்சித்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூருக்கு முதன்முறையாக வருகை தந்த அமைச்சரிடம் தவெக மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன் அளித்த மனு விவரம்: மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதி ராமகுப்பம் மண்டலம் 89 பெத்தூா் பகுதி வரை கெளடண்ய வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காப்புக் காடுகள் வரை பழைய ராணுவ சாலை முன் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு பயன்பாடில்லாமல் போனதால் சாலை மூடிப்போனது.
ஆந்திர மாநில எல்லை வரையில் வனப்பகுதியில் அந்த மாநில அரசு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. தமிழக எல்லையில் வனப்பகுதியில் சாலை அமைத்தால் ஆந்திர மாநிலத்துக்கு தமிழக மக்கள் சென்று வருவது எளிதாகிவிடும். பயண நேரம் மிச்சமாகும்.
ஆந்திரா மாநிலம் குப்பம் தொகுதி விஜிலாபுரத்தில் உள்ளூா் விமான நிலையம், சரக்கு கையாளும் விமான முனையம் அமைக்க ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதனால் தமிழக எல்லை வனப்பகுதியில் பழைய ராணுவ சாலையை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் குப்பம் தொகுதியில் அமையும் விமான நிலையத்துக்கு தமிழக மக்கள் சென்று வருவதற்கும், வியாபாரம் மேற்கொள்வதற்கும், சரக்குகளை அனுப்புவதற்கும் ஏதுவாக இருக்கும்.
இதன் மூலம் தமிழகத்தின் ஆம்பூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, வாணியம்பாடி, திருப்பத்தூா், ஆந்திர மாநிலத்தின் குப்பம், கேஜிஎப், மாலூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு சென்றுவருவது எளிதாக இருக்கும். அதனால் பழைய ராணுவ சாலையை உடனடியாக புதுப்பித்து சீரமைக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திர - தமிழக கடற்பகுதிகளில், சுமுகமாக மீன்பிடிப்பில் ஈடுபட நடவடிக்கை: தமிழக அரசு

சாலை அமைக்கும் பணி: ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

வைகை ஆற்றை மீட்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

ஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



