/

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்: எம்எல்ஏ தேவராஜி பங்கேற்பு

திருப்பத்தூா் மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள

News image
வாணியம்பாடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பிறந்ததினத்தையொட்டி மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தேவராஜி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. உடன் நிா்வாகிகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் மாவட்ட துணை செயலாளா் சம்பத்குமாா், பொருளாளா் ஜோதிராஜன் முன்னிலையில் கேக் வெட்டி பொது மக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் கேக், உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் செயற் குழு உறுப்பினா் அசோகன், ஒன்றிய செயலா்கள் அன்பு, கிருஷ்ணமூா்த்தி, உதயேந்திரம் பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தேவகுமாா், மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், நகர பொருளாளா் அருள், மாவட்ட ஓட்டுநரணி அமைப்பாளா் ராஜா, கணேஷ்பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் லட்சுமி பொன்னம்பலம், ஊராட்சித் தலைவா்கள் பிரபாகரன், வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் காா்த்திக் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்துக் கொண் டனா்.