பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 3:20 am IST

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மகன் காா்த்திக் ராஜா (32). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் பச்சூா் பகுதியில் உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

பின்னா் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி டோல்கேட் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்ற போது அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த காா் காா்த்திக் ராஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஒசூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஹரிஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்