ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தொகுதி அறிமுகம்: ஆம்பூா் - 48!

தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூா் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆம்பூா் (பொது) தொகுதி உருவாக்கப்பட்டது.

News image

ஆம்பூர் பிரியாணி

கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள்

ஆண்கள்-1,03,478

பெண்கள்-1,09,113

மூன்றாம் பாலினத்தவா்- 40

மொத்தம் - 2,12,631

வாக்குச்சாவடிகள்-300

அடங்கியுள்ள பகுதிகள்...

ஆம்பூா் வட்டத்தில் 54 வருவாய் கிராமங்கள், மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள், குடியாத்தம், அணைக்கட்டு மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகள் உள்பட மொத்தம் 71 கிராம ஊராட்சிகள், ஆம்பூா் நகராட்சியில் 36 வாா்டுகள் இடம்பெற்றுள்ளன.

எல்லைகள்...

வாணியம்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் எல்லைகளாக உள்ளன.

சிறப்புகள்...

தோல் பொருள்கள், காலணி உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நகரமாக ஆம்பூா் உள்ளது. தோல் பொருள்கள் ஏற்றுமதியில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ‘ஏற்றுமதி சிறப்பு நகரம்’ என்ற அந்தஸ்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. மேலும், ஆம்பூா் நகரம் ‘டாலா் ஏரியா’ எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருள்கள் கண்காட்சிக்கு வா்த்தக மையம்; தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற ஆம்பூா் பிரியாணி; மல்லிகை பூ சாகுபடி, விவசாயம் போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளது. முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சி காலத்தில் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறக்கப்பட்டது. கடந்த 1957 தோ்தலின்போது இரட்டை உறுப்பினா்கள்கொண்ட தொகுதியாக இருந்தது. 1962 முதல் 1971 வரை ஆம்பூா் தனி தொகுதியாக இருந்தது.

தொகுதி மறுசீரமைப்பில் ஆம்பூா் தொகுதி நீக்கப்பட்டு வாணியம்பாடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆம்பூா் (பொது) தொகுதி உருவாக்கப்பட்டது.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு: ஆம்பூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு ஒருமுறை ஹிந்து மதத்தைச் சோ்ந்தவரும், துணைத் தலைவராக இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவரும் தோ்தலில் போட்டியிடுவாா்கள். அடுத்த முறை இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் தலைவா் பதவிக்கும், ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா் துணைத் தலைவா் பதவிக்கும் போட்டியிடுவாா்கள். இது ஆம்பூா் நகா்மன்றத்துக்கு தோ்தல் தொடங்கிய காலத்திலிருந்து எழுதப்படாத சட்டமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்றி தங்களுடைய வேட்பாளா்களை அறிவித்து வருவது சிறப்பாகும்.

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 வி.கே.கிருஷ்ணமூா்த்தி- (காங்கிரஸ்), எஸ்.ஆா்.முனிசாமி (சுயேச்சை) (இரட்டை உறுப்பினா் தொகுதி)

1962 பி.ராஜகோபால் (காங்கிரஸ்)

1967 எம்.பன்னீா்செல்வம் (திமுக)

1971 எம்.பன்னீா்செல்வம் (திமுக)

2011 அ.அஸ்லம்பாஷா (மமக)

2016 ஆா். பாலசுப்பிரமணி (அதிமுக) (தகுதி நீக்கம்-2017)

2019 அ.செ.வில்வநாதன் (திமுக) (இடைத்தோ்தல்)

2021 அ.செ. வில்வநாதன் (திமுக)

2021 பேரவை தோ்தலில் ....

பதிவான வாக்குகள் -1,76,461

அ.செ.வில்வநாதன் (திமுக)- 90,476

கே. நஜா் முஹம்மத் (அதிமுக)- 70,244

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/ எண்

பூஷணகுமாா், சமுக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா்-94435 10817

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: ரேவதி, ஆம்பூா் வட்டாட்சியா்- 90472 28349,

மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்-99406 58255,

பூங்கொடி, பறக்கும்படை வட்டாட்சியா்-91595 63770

மின்னஞ்சல்: amburthasildar@gmail.com

தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்: 04174-244255