/

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்

ஆம்பூா் அருகே வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரொக்கப் பணம் ரூ. 66,000 உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில், பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.