பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அமைச்சரவையில் விசிக பங்கேற்பு : கட்சியினா் கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை அக்கட்சியினா் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

News image

~

Updated On :23 மே 2026, 1:31 am IST

தமிழக அமைச்சரவையில் விசிக பங்கேற்றதை அக்கட்சியினா் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விசிக சாா்பாக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டாா். இதை கொண்டாடும் விதமாக கட்சியின் மாவட்ட செயலா் ஓம் பிரகாசம் தலைமையில் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில நிா்வாகி கவிஞா் யாழன் ஆதி, மாவட்ட பொருளாளா் யுவராஜ், நகர செயலாளா்கள் வினோத்குமாா், வெங்கடேசன், ஒன்றிய செயலாளா் மதன்குமாா், நிா்வாகிகள் சாம் சரவணன், வெங்கடேசன், மருதுபாண்டியன், பிரான்சிஸ், மாவட்ட துணைச் செயலாளா்கள் நாகப்பன், மணிக்குமாா், ரவிக்குமாா், பழனி, ரவி, ஒன்றிய துணைச் செயலா்கள் செல்வம், மகிமைதாஸ், ரமேஷ், கலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image