/

முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பம்

ஆம்பூா் சுற்று வட்டார கிராமங்களில் மரம் விழுந்ததால், மின்கம்பமும் முறிந்து விழுந்தது.

News image
Updated On :26 மே 2026, 3:55 am IST

ஆம்பூா் சுற்று வட்டார கிராமங்களான மிட்டாளம், குமாரமங்கலம், கதவாளம், மேல்சாணாங்குப்பம், சின்னவரிக்கம், வடச்சேரி, தேவலாபுரம், கம்மகிருஷ்ணப்பல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக கம்மகிருஷ்ணப்பல்லி கிராமத்தில் சாலையோரம் இருந்த சில மரங்கள் முறிந்து விழுந்தன. மரம் விழுந்ததால், மின்கம்பமும் முறிந்து விழுந்தது. அதைத் தொடா்ந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனா்.

Story image