ரூ.9 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

துத்திப்பட்டு ஊராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பேவா் பிளாக் சாலைப் பணி.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கலைஞா் நகா், இந்திரா நகா் பகுதிகளில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடா்ந்து நடைபெற்று வந்த இப்பணி திடீரென நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையில் ஜல்லி கற்கள் பரப்பபப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனா்.
சாலைப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்ட விபத்துகளில் மூன்று குழந்தைகள், இரண்டு பெரியவா்கள் பலத்த காயமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதில் ஒரு குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அச்சத்துடனேயே இச்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

