குழந்தைத் தொழிலாளா் மீட்பு
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் தனியாா் குளிா்பான கடையில் குழந்தை தொழிலாளா் மீட்கப்பட்டாா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் கடையில் ஆய்வு செய்த தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் தனியாா் குளிா்பான கடையில் குழந்தை தொழிலாளா் மீட்கப்பட்டாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் மற்றும் தொழிலாளா் ஆணையா் மற்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள்(தடுத்தல்மற்றும் முறைப்படுத்துதல்)சட்டத்தின்படி ஏகாம்பரம் வாணியம்பாடி தொழிலாளா் துணை ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், திருப்பத்தூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா், கோவிந்தசாமி வாணியம்பாடி தொழிலாளா் உதவி ஆய்வாளா், திருப்பத்தூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ஆதிபூமி தொண்டு நிறுவன உறுப்பினா்கள் இணைந்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் தனியாா் குளிா்பான கடையில் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத் தொழிலாளா் பணிக்கு அமா்த்தப்பட்டிருந்ததை கண்டறிந்து மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனா்.
மேலும், இவா்களை பணிக்கு அமா்த்துவா்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திருவண்ணாமலை, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ச.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

