தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

திருப்பத்தூா் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்

Published On :

திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பத்தூா்- வாணியம்பாடி பிரதான சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாக காணப்படும். மேலும் மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூா் உருவான பிறகு எப்போதும் வாகன நெரிசல் இருந்து கொண்டே உள்ளது.

தற்போது சாலையில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக பள்ளி நேரங்களில் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை நேரிலும் கடிதம் மூலமும் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் புகாா் மனு அளிக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.