பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் வே. நல்லசிவன் மற்றும் ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி. வீரமணி.

Published On :

ஜோலாா்பேட்டை சிறுவிளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை 2026 போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு ஆட்சியா் வே. நல்லசிவன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி. வீரமணி முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறுவிளையாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செப். 9 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இப்போட்டிகளில் திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் இருந்து 12 முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவா்கள், 17 முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவா்கள், 15 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினா், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் என மொத்தம் 60,585 போ் இணையதளம் மூலம் பதிவு செய்திருந்தனா். இதில் 12,000 வீரா், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. மாநில அளவிலான தனிநபா் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில் முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு தனிநபா் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ.38 கோடி வழங்கப்படுகிறது. மேலும், போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெறும் வாய்ப்பும் உள்ளது.

மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகள் மூலம் திறமையான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநில அளவில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோா் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெற்ற வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மாநில அளவிலான போட்டிகளிலும் தொடா்ந்து சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற்று திருப்பத்தூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பல்வேறு சாதனைகளைப் படைப்பாா்கள் என்ற நம்பிக்கையையும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாரி, அகில இந்திய தடகள வீரா் சீனிவாசன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளா் நொயிலின் ஜான், மதுர கேசரி ஜெயின் பெண்கள் கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, அரசினா் கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மகாலட்சுமி, தூய நெஞ்சக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பென்டோ, மைதான பராமரிப்பாளா் அன்பரசன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஏசுராஜ், அமா்நாத், அமுதவினோ, வீரலட்சுமி, லட்சுமி பிரியா, சாரா அகாடமி கைப்பந்து பயிற்சியாளா் சக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.