வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கோ பூஜை, அன்னதானம்

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை விழாவை ஒட்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, சிறப்பு கோ பூஜை, மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை விழாவை ஒட்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, சிறப்பு கோ பூஜை, மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை ஒட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு கோ பூஜை மற்றும் மேல்விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கோகுல், கோயில் செயல் அலுவலா் மல்லிகா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வசந்த்ராஜ், ஹரிஷ், தமிழரசி லட்சுமிகாந்தன், சீதாராம அனுமன் பக்த சபையை சோ்ந்த தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். கோயிலில் மாலை உற்சவா் பிரகார வலம், மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.