சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி

திருத்தணியில் சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருத்தணியில் சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி போக்குவரத்து காவல் துறை, லயன்ஸ் கிளப் சங்கம் இணைந்து இப்பேரணியை நடத்தின.

பேரணிக்கு திருத்தணி லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் தயாளன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 உதவி ஆய்வாளர் செல்வராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி ஏ.எஸ்.பி. விஜயகுமார் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில், சாலையில் பாதுகாப்பாக செல்வது எப்படி என்பது குறித்து பேச்சுப்போட்டி நடைபெற்றது. பின்னர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினர் ஒத்திகை செய்துக் காட்டினர்.

 ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் ஏ.பி. கோபாலன், மத்தூர் அரசு மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி.எஸ்.விஸ்வநாதன், லயன்ஸ் சங்கச் செயலாளர் அரிகுமார் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com