திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேல்டெக் கல்லூரி பட்டமளிப்பு விழா:ஆளுநர் ரோசய்யா பங்கேற்பு

ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:29 am IST

ஆவடி வேல்டெக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனத் தலைவர் ரங்கராஜனின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் சகுந்தரா ரங்கராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கராஜன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேல்டெக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.பி.பாஜ்பாய் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று ரங்கராஜனின் சுயசரிதை புத்தகத்தை வெளி

யிட்டார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்து விளங்கிய 17 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், 550 மாணவர்களுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.