திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

நானியின் தி பாரடைஸ் படத்தின் பாடல் குறித்து...

News image

நானியின் போஸ்டர். - படம்: எக்ஸ் / எஸ்எல்வி சினிமாஸ்.

Updated On :26 மே 2026, 9:14 pm IST

நடிகர் நானி நடித்துள்ள புதிய படத்தின் ’ஆயா ஷேர்’ எனும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறிப்பாக யூடியூப்பில் இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக “தி பாரடைஸ்” எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’ஆயா ஷேர்’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர்.

இந்த நிலையில், யூடியூப்பில் தெலுங்கு பதிப்பு 150 மில்லியன் (15 கோடி) பார்வைகள், 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக்குகளைக் கடந்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிருத்தின் இசைக்கச்சேரியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்ட நானி அனிருத் பாடப்பாட நடனமாடினார். இதுவும் வைரலானது.

இந்தப் படம் ஆக.21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

Summary

Aaya Sher 150 MILLION+ VIEWS for the Telugu version alone & roaring with 1.6M+ LIKES on YouTube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.