கற்றல் அடைவுத் திறன் சார்ந்த பயிற்சி
திருவள்ளூர் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுத் திறன் சார்ந்த 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை


திருவள்ளூர் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுத் திறன் சார்ந்த 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கி நிறைவுற்றது.
முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆ.அண்ணாமலை, ரவிந்திரன், ரஹமத்துன்னிசா, லாவண்யா, ஊ.மீனாட்சி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
அத்துடன், தேர்வு பயத்தை தீர்க்கும் வகையிலும், வகுப்பறையில் சந்தேகத்தை உடனுக்குடன் எவ்வாறு தீர்த்து வைப்பது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் தா.முத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிறைவாக மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பெர்னத் பத்மாவதி மற்றும் ஒன்றியக் கல்வியாளர், தலைமையாசிரியர் ரா.தாஸ் ஆகியோர் நன்றி கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...