சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் மேற்கூரையில் துளையிட்டு தங்கநகைகள், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் ஸ்ரீராம் நகர் 2ஆவது தெருவில் வசித்து வருபவர் முகேஷ்குமார்(45). இவர் ரெட்டேரி அருகே கடப்பா சாலையில் மகாலட்சுமி தங்க மாளிகை என்ற நகைக் கடையை நடத்தி வருகிறார். இவர் மதிய உணவுக்காக பகல் 1 மணிமுதல் மாலை 4 மணிவரை கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் வழக்கம்போல் வீட்டிற்குச் சென்று விட்டு வந்து கடையை திறந்தபோது, கடையின் மேற்பகுதியில் துளையிட்டு, 3 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் கடையில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
இதையடுத்து, போலீஸில் புகார் கொடுத்தார். அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் டாக்டர் சுதாகர், இணை ஆணையர் சந்தோஷ்குமார், கூடுதல் ஆணையர் ஜெயராம், உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர் குழு கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த கட்டடத்தில் கீழே 2 கடையும் மேலே 2 கடைகளும் உள்ளன. மேலே இருந்த கடையில், வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் துணிக் கடை நடத்தப் போவதாக கடந்த 10 நாள்களுக்கு முன் கட்டட உரிமையாளர் பாண்டுரங்கனிடம் தெரிவித்துள்ளனர். துணிக்கடை நடத்த வந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் காட்சி பதிவு செய்யும் பெட்டி என அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதில், கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ்

”இதெல்லாம் ஒரு கூட்டணியா?” தவெக நிர்மல்குமார் | DMK | TVK

வேலூா் திமுக எம்.பி. மீதான தோ்தல் வழக்கில் 5 அலுவலா்களிடம் விசாரணை
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

