
கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரூ.20.40 லட்சம் நிவாரணப் பொருள்கள்
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்காக திருவள்ளூர் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20.40 லட்சம்
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்காக திருவள்ளூர் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை ஏற்றிய வாகனத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்காக திருவள்ளூர் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப் பொருள்களை சேகரித்தனர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட அரிசி மூட்டைகள், துணி வகைகள், சர்க்கரை, ரவை, மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ரூ.20.40 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரியை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அலுவலக மேலாளர் தமிழ்ச்செல்வன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தீபகுமார், விஜயநாராயணன், அர்ஜுன குமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தணியில்....
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தணி தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை வழங்கினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரணத் தொகைகளை நேரடியாகவும், அரசு மூலமாகவும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தணி ம.பொ.சி.சாலையில் இயங்கி வரும் தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர் பாலாஜி உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து, ரூ. 1 லட்சம் வசூலித்தனர்.
இதற்கான காசோலையை, திருத்தணி நகராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம், பள்ளி தாளாளர் பாலாஜி, பள்ளி முதல்வர் சத்யா, துணை முதல்வர் விநாயகம், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் புதன்கிழமை நேரில் வழங்கினர். நிகழ்வில், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகராட்சி மேலாளர் தங்கராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் நீல நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





