என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:40 am IST

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கும்மிடிப்பூண்டி பஜாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை கடந்த ஜூன் 11-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதன் அருகில்,  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் அதிகமாக வந்து போகும் வங்கிகள், திரையரங்கம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அங்காடிகள் போன்றவை உள்ளன. எனவே, முக்கிய பகுதிகளின் நடுவே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்து கடையை மூடிச்சென்றனர். 
இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 23) காலை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் கேசவன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கெனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்பட்ட கடையை டாஸ்மாக் அதிகாரிகள் மீண்டும் திறந்ததைக் கண்டித்து,  டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் பாக்ய சர்மா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.