இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவள்ளூர் அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்திவைத்து, குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும் வரையில் பழைய இடத்திலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


திருவள்ளூர் அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்திவைத்து, குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும் வரையில் பழைய இடத்திலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
திருவள்ளூர் அருகே தாராட்சி ஊராட்சிக்கு உள்பட்ட முசல் நாயுடு கண்டிகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை நிறுத்தி, மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 
திவ்யஸ்ரீயிடம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பாலா என்ற பாலயோகி, செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி ஊராட்சிக்கு உள்பட்ட பால்ரெட்டி கண்டிகையை ஒட்டியுள்ள முசல் நாயுடு கண்டிகையில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருப்புகளை அமைத்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஆட்சியர் மூலமாக வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் வீடுகளை அகற்றப்போவதாக கூறியுள்ளனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (65) மனவேதனையில் விஷம் அருந்தினார். 
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுப்பிரமணி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை சுப்பிரமணியின் சடலத்தை வாங்க மாட்டோம் என பொதுமக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். 
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அதுவரையில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திவ்யஸ்ரீ கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.