கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை: பொதுமக்கள் புகார்

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை எனபொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

Published On :

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடிக்கு மருந்து இல்லை எனபொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.  இங்கு, தத்தைமஞ்சி, திருப்பாலைவனம், கடப்பாக்கம், சிறு பழவேற்காடு, ஊரணம்பேடு, செங்கழுநீர்மேடு, ரெட்டிப்பாளையம், வாயலூர், திருவெள்ளைவாயல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 
இந்த மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்,  நாய்க்கடிக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஊழியர்கள் நாய்க்கடிக்கு மருந்து இல்லை என்றும், அவரை மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும்படியும் கூறியுள்ளனர். 
மீஞ்சூரில் அவருக்கு ஒருநாள் மட்டும் ஊசி போட்டுள்ளனர். மறுநாள் சென்ற போது அவரிடம் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாய்க்கடிக்கு உள்ளான நபர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.  இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் நோயாளிகளை கனிவுடன் கவனித்து சிகிச்சை அளிப்பதில்லை. மேலும் இரவு நேரத்தில் மருத்துவர் யாரும் பணியில் இருப்பதில்லை.  மருத்துவர் பணியில் இல்லாத நேரத்தில் பிரசவத்துக்கு வருவோர், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.  அதேபோன்று இங்கு நாய்க்கடிக்கு மருந்து இல்லாததால்,  நாய்க் கடிக்கு ஆளான நபர்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதாக புகார் கூறுகின்றனர். 
எனவே இப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நலன் கருதி காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணியில் மருத்துவர் இருக்கவும், நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.