வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவள்ளூர் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

திருவள்ளூர் அருகே தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திங்கள்கிழமை அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட பகுதி.
Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:33 am

DIN

திருவள்ளூர் அருகே தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திங்கள்கிழமை அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது. சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்தியநாராயணன் (26), சூரியநாராயணன் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் தம்பி சூரியநாராயணனுக்கு மட்டும் திருமணமானாது. இதில் மூத்த சகோதரர் சத்தியநாராயணனுக்கு திருமணம் ஆகவில்லையாம். 

இதற்கிடையே திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கிக் கொண்டு சத்யநாராயணன்  வடபழனியில் உள்ள சங்கர மடத்தில் சமையலராக இருந்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் சத்யநாராயணன் நெமிலிச்சேரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது காவல்சேரி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அதிலிருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து தனது உடலின் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். 

அதோடு தீ மளமள பற்றி எரியும் போது பாலத்தில் இருந்து கீழே குதித்தாரம். இதில் படுகாயம் அடைந்த நிலையில் தீயில் கருகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் சோபாதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து எதற்காக தீ வைத்துக் கொண்டு பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அதிகாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.