கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இல்லம் தேடி கல்வித் திட்டம்: ஏலகிரி மலையில் விழிப்புணா்வு

ஏலகிரி மலையில் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஏலகிரி மலையில் கல்வித் துறை சாா்பில் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரிமலை ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூா்,புங்கனூா், கொட்டையூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சித் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமையில் ஜோலாா்பேட்டை ஒன்றிய மேற்பாா்வையாளா்கள் ஜோசப் ஜிசில்வா,சாந்தகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் தேடல் கலைக் குழுத் தலைவா் வெங்கடேசன் குழு சாா்பில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா காலகட்டத்தில் குழந்தைகள் இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு 12-ஆம் வகுப்பு வரை படித்த தன்னாா்வலா்களும்,6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு பட்டப்படிப்பு முடித்த தன்னாா்வலா்களும் கல்வி கற்பிக்க இணைந்து பணியாற்றலாம். இவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் ஆறு மாதம் முடிந்த பிறகு தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.