இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருவள்ளூர் ஆட்சியர் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி

ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரிடவாக்கம் ஊராட்சி கரானா தடுப்பூசி 100 சதவீதம் போட்டுக் கொண்டதை பாராட்டும் விதமாக

News image
திருவள்ளூர் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணி.
Updated On :9 செப்டம்பர் 2021, 10:07 am

DIN

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரிடவாக்கம் ஊராட்சி கரானா தடுப்பூசி 100 சதவீதம் போட்டுக் கொண்டதை பாராட்டும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த மோட்டார் சைக்கிள் பேரணி பேரிடவாக்கம் ஊராட்சியில் ஆரம்பித்து பெருஞ்சேரி போந்தவாக்கம் சீதஞ்செரி வனப்பகுதி வழியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. 
சுமார் 25 மீட்டர் மோட்டார் சைக்கிள் பேரணி பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்தி வாசங்கள் எழுதப்பட்டு நடைபெற்றது. சீதஞ்செரி பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி முக்கியத்துவத்தை மாவட்ட ஆட்சியர் அப்போது எடுத்துரைத்தார். 
நிகழ்ச்சியில் பேரிடவாக்கம் ஊராட்சி மன்றத் தில்லை குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.