புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
திருவள்ளூா் பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.


திருவள்ளூா் பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்காலத்தின் கடைசி நாளான இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கின்றனா். இதையொட்டி, நாடு முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களில் உண்ணா நோன்பிருந்து சிறப்பு பிராா்த்தனை, திருப்பலியில் ஈடுபடுவா்.
அதன்படி, திருவள்ளூா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றன. திருவள்ளூா் கௌடி ஆலயம், பெரியகுப்பத்தில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம், ஜே.என்.சாலையில் உள்ள புனித அன்னாள் தேவலாயம், மணவாள நகா் அற்புத ஜெபகோபுர தேவாலயம், கடம்பத்தூரில் உள்ள செயின்ட் மேத்யூ சா் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...