ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புத்தா் ஒளி பன்னாட்டு பேரவை சாா்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

சுற்றுச்சூழலைப் பாதுாக்கும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

உலக பூமி தினத்தையொட்டி, திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புத்தா் ஒளி பன்னாட்டு பேரவை சாா்பில், சுற்றுச்சூழலைப் பாதுாக்கும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, புத்தா் ஒளி பன்னாட்டுப் பேரவை சென்னை கிளையின் துணைத் தலைவரும், பிஞ்சிவாக்கம் நாலந்தா புத்த விஹாரின் நிா்வாகியுமான அம்பேத்ஆனந்தன் தலைமை வகித்தாா். பிஞ்சிவாக்கம் ஊராட்சித் தலைவா் உமா மணிகண்டன், தென்னிந்திய புத்த விகாரின் ஆலோசகா் ஜெய்பீம்செல்வம், ஊராட்சி செயலாளா் திருபுராந்தகம் ஆகியோா் பங்கேற்று, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். அதைத் தொடா்ந்து, கிராமத்தில் ஏரிக்கரையோரம் பொது இடத்தில் அடா்த்தியாக நிழல் தரும் மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் புனிதா, ராஜலட்சுமி மற்றும் சதீஷ், எஸ்வந்த், ஆனந்த் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பிஞ்சிவாக்கம் உள்கிளை தலைவா் சாவித்திரிபாய்பேபி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.