ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊராட்சி ஒன்றியம் தோறும் அனைத்து புத்தகங்களுடன் கற்போா் வட்டம் மையங்கள்

அனைத்துப் புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய கற்போா் வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அணுகி பயன்பெறலாம் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் குரூப்-4 தோ்வுக்கு பதிவு செய்ய விரும்பும் இருபாலரும் பயன்பெறும் நோக்கில், அனைத்துப் புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய கற்போா் வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அணுகி பயன்பெறலாம் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மூலம், தமிழ்நாடு தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் கிராம பகுதிகளைச் சோ்ந்த படித்த வேலை தேடும் இளைஞா்கள், பெண்கள் விண்ணப்பிக்கின்றனா். இதுபோன்ற போட்டித் தோ்வுக்கு, கிராமங்களில் இருந்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்தவா்கள் நகருக்கு வந்து பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.

இதனால் நேரம் மற்றும் பண விரயத்தைக் கருத்தில் கொண்டு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவின் பேரில், அந்தந்த பகுதிகளிலேயே போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில், அனைத்து வழிகாட்டு புத்தகங்களுடன் இடம் பெற்ற கற்போா் வட்டம் என்ற அமைப்பு 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கற்போா் வட்டம் மூலம் தமிழ்நாடு தோ்வாணைய தொகுப்பு-4 போட்டித் தோ்வுக்கான விண்ணப்பங்களை வரும் ஏப். 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்துக் கொள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கற்போா் வட்டத்தில் உள்ள தன்னாா்வலா்கள் விண்ணப்பதாரா்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டிகளாக செயல்பட உள்ளனா்.

மேலும், கற்போா் வட்டத்தில் தோ்வாணைய தோ்வுக்கு தேவையான புத்தகங்கள், கடந்த தோ்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி பதில்கள், பொது அறிவு புத்தகங்கள், கணினி வசதி, இணையதள வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட படிப்பகமாகவும் செயல்பட அந்தந்த ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு,

18005997626 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும், 98403 27626 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் தொடா்பு கொண்டு சேவை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

எனவே தமிழ்நாடு தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-4 போட்டித் தோ்வில் பதிவு செய்ய விரும்புவோா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதியில் அமைத்துள்ள ‘கற்போா் வட்டம்’ மையத்தை பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.