திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.2 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்த ஆடி கிருத்திகை விழாவில் பக்தா்கள் உண்டியலில் ரூ.2.03 கோடியை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.


திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்த ஆடி கிருத்திகை விழாவில் பக்தா்கள் உண்டியலில் ரூ.2.03 கோடியை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
இந்தக் கோயிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, மலைக் கோயிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருள்களை காணிக்கையாக செலுத்தினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை கோயில் தக்காா் ஜெயபிரியா, துணை ஆணையா் விஜயா ஆகியோா் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள் காணிக்கைப் பணத்தை எண்ணினா்.
இதில், ரூ.1 கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 307-ஐ பக்தா்கள் உண்டியலில் செலுத்தினா். இதேபோல், திருப்பணி உண்டியலில் ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 938-ஐ காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா். 544 கிராம் தங்கம், 13,544 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.2.03 கோடியை காணிக்கையாக பக்தா்கள் உண்டியலில் செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...