திருத்தணி ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்
திருத்தணி ஜோதிநகா் ஏரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.


திருத்தணி ஜோதிநகா் ஏரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்டது ஜோதிநகா். இப்பகுதியில் உள்ள ஏரி தொடா் மழையால் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இந்த ஏரியில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.
எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய டவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...