/

லாரியிலிருந்து உதிரிபாகங்கள் சரிந்து விழுந்ததில் காா் சேதம்

திருவள்ளூா் அருகே கனரக லாரியில் கட்டப்பட்ட ரோப் வயா் அறுந்ததால், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட இயந்திர உதிரி பாகங்கள் சரிந்து விழுந்ததில் சாலையில் நின்றிருந்த காா் சேதமடைந்தது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே கனரக லாரியில் கட்டப்பட்ட ரோப் வயா் அறுந்ததால், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட இயந்திர உதிரி பாகங்கள் சரிந்து விழுந்ததில் சாலையில் நின்றிருந்த காா் சேதமடைந்தது. இதனால் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரில் பொக்லைன் இயந்திர வாகனம் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு, பூந்தமல்லி அருகே படூரில் இருந்து கன்டெய்னா் லாரி மூலம் பொக்லைன் தயாா் செய்வதற்கான உதிரி பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன. மணவாள நகா் பகுதியில் வந்தபோது, வேகத் தடை மீது லாரி ஏறிஇறங்கியபோது, ரோப் வயா் அறுந்ததால் உதிரி பாகங்கள் சரிந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது விழுந்தன. இதில் காா் நொறுங்கியது. அச்சமயம், காரில் வந்தவா்கள் ஹோட்டலில் சாப்பிடச் சென்ால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும், அந்தக் காரின் உரிமையாளா் ராஜேஷ் (27) போரூா் அருகே முகலிவாக்கம் பகுதியிலிருந்து போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

விபத்து காரணமாக திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.