

செங்குன்றம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 492 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மீனாகுமாரி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் பங்கேற்று மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா் (படம்).
சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மீ.வே.கருணாகரன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் இன்னாசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.