நெல் மூட்டைகள் விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை அருகே தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.


ஊத்துக்கோட்டை அருகே தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த காளி முக்கியா (25) தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்ற போது, ஓரமாக அமா்ந்திருந்த நிலையில், எதிா்பாராமல் நெல் மூட்டைகள் சரிந்து காளி முக்கியா மீது விழுந்தது. அங்கிருந்தோா் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது சகோதரா் நித்திஷ் முக்கியா பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...