ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் வெட்டிக் கொலை

ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:39 pm

DIN

ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜாா்ஜின் மகன் ராபின் (24). கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயலில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திருவள்ளூா் அருகே போந்தவாக்கத்தில் நண்பா் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விருந்து நிகழ்வில் பங்கேற்க புதன்கிழமை இரவு ராபின் சென்றாராம். பின்னா் நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் தனது நண்பருடன் ராபின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திடீரென இருவரையும் வழிமறித்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ராபின், கமல் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினா். ஆனால் அந்தக் கும்பல் ராபினை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராபினுடன் திருமண விருந்தில் பங்கேற்ற சிலரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.