எடக்குப்பம் ஸ்ரீ நூக்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மெதூரை அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்காளம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்தக் கோயில் கிராம மக்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி, நான்கு கால யாக சாலை வேள்வியுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும் மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, பல்வேறு நதிகளில இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா் கோபுர கலசங்கள் மீது தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைபடுத்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை எடக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
