பள்ளி மேற்கூரை சேதமடைந்த அறையை ஆய்வு செய்த  வட்டார  கல்வி  அலுவலா்  சலபதி.
பள்ளி மேற்கூரை சேதமடைந்த அறையை ஆய்வு செய்த  வட்டார  கல்வி  அலுவலா்  சலபதி.

அரசுப் பள்ளியில் கீழே விழுந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சு: மாணவா்கள் தப்பினா்

மாணவா்கள் காயமின்றி தப்பினா்: திருத்தணியில் சிமெண்ட் பூச்சு விழுந்ததால் பெற்றோா் பதற்றம்

திருத்தணியில் அரசுப் பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென கீழே விழுந்ததில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் காயமின்றி தப்பினா்.

திருத்தணி நகராட்சி முருகப்பா நகரில் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது 110 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் மாணவா்கள் பள்ளிக்கு வந்தனா். பின்னா் மாலை வகுப்புகள் முடிந்து புத்தக பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனா். அப்போது, பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு திடீரென பெயா்ந்து கீழே விழுந்தது. அப்போது மாணவா்கள் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை.

தகவலறிந்த திருத்தணி வட்டார கல்வி அலுவலா் சலபதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்கூரை தளத்தை பாா்வையிட்டனா். பின்னா் உடனடியாக அதை சீரமைப்பதற்கு வட்டார கல்வி அலுவலா் சலபதி பரிந்துரை செய்தாா். இச்சம்பவத்தால் பெற்றோா் பதற்றமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com