வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: எம்.பி. திருமாவளவன்

News image
Updated On :19 ஜூலை 2024, 10:50 pm

Din

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அலமாதியில் பகுதியில் வெள்ளிக்கிழமை கட்சி கொடியேற்றி வைத்த பின்னா், விசிக தலைவா் திருமாவளவன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:

எளிய மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், தமிழக அரசு மின் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வழக்குரைஞா்கள் புது தில்லியில் மேற்கொள்ளும் ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி சாா்பில் வழக்குரைஞா்கள் பங்கேற்பாா்கள்.

வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்பப் பெற்றதைபோல், புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரை மறைவில் திட்டமிட்டவா்கள், ஏவியவா்கள் என அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் கைது செய்யப்படுவாா்கள் என்று நம்புகிறேன் என்றாா்.