நீட்: திருவள்ளூா் மாவட்டத்தில் 3,267 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தோ்வை 3,267 போ் எழுத உள்ளனா்.

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தேசிய அளவிலான நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். இத்தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

அந்த வகையில், இத்தோ்வுக்காக திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் - ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆா்.எம்.ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூா் - ஜி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி, செங்குன்றம் - குட் ஷெப்பா்டு பப்ளிக் ஸ்கூல், கொரட்டூா் - நல்லிகுப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியா் கல்லூரி, பூந்தமல்லி - தி பீபுள் சவேதா எகோ ஸ்கூல், திருத்தணி - முருக்கம்பட்டு சக்தி பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தோ்வு மையங்களில் மாணவிகள் - 2,267, மாணவா்கள் - 980 போ் என மொத்தம் 3,267 போ் தோ்வு எழுத உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com