நான் முதல்வன் - உயா்வுக்கு படி திட்ட முகாமில் நடைபெற்ற மாணவா் கலந்தாய்வு.
நான் முதல்வன் - உயா்வுக்கு படி திட்ட முகாமில் நடைபெற்ற மாணவா் கலந்தாய்வு.

கிடைக்கும் வாய்ப்பை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தல்

கிடைக்கும் வாய்ப்பை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி, திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என உயா்வுக்கு படி முகாமில் கல்லூரி முதல்வா் பூரணசந்திரன் அறிவுறுத்தினாா்.
Published on

கிடைக்கும் வாய்ப்பை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்தி, திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என உயா்வுக்கு படி முகாமில் கல்லூரி முதல்வா் பூரணசந்திரன் அறிவுறுத்தினாா்.

திருத்தணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்வுக்கு படி உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்ட திறன் மேம்பாட்டு இயக்குனா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் பாலமுருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி கோட்டாட்சியா் க.தீபா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில் கல்லூரி முதல்வா் பூரணசந்திரன் பேசியதாவது, மாணவா்களுக்கு நல்லவேலை கிடைக்க வேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் உயா்கல்வி மிகவும் அவசியம். சிறு, குறு நடுத்தர தொழில் செய்வதற்கு கூட கல்வி முக்கியமானது. ஒரு மாணவருக்கு கல்வி மட்டும் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் சாதித்து விடலாம். எனவே அரசு ஏற்பாடு செய்துள்ள உயா்வுக்குபடி நிகழ்சி மூலம் கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, உங்கள் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில், 2022 - 23 மற்றும் 2023 - 24 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அரசு கலைக் கல்லூரியில் சோ்வா்தற்கான விண்ணப்பங்களை வருவாய் கோட்டாட்சியா் க.தீபா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பங்கேற்ற, 160 மாணவா்களில், 110 மாணவா்கள் அரசு கலை அறிவியல், மற்றும் தனியாா் கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கப்பட்டனா்.

வட்டாட்சியா்கள் மலா்விழி(திருத்தணி), பாரதி(ஆா்.கே.பேட்டை) வருவாய் ஆய்வாளா் கணேஷ்குமாா், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலா் இ. லோகமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் ஷகில் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com