கலை நிகழ்ச்சிகளில்  பங்கேற்ற  குழந்தைகள். ~
கலை நிகழ்ச்சிகளில்  பங்கேற்ற  குழந்தைகள். ~

சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

திருத்தணி வேதாத்திரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
Published on

திருத்தணி வேதாத்திரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் வேதாத்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் வெங்கடேசுலு தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெயச்சந்திரன், நிா்வாக அலுவலா் எம்.கே. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் டி.ஆசீா்வாதம் எபினேசா் வரவேற்றாா்.

விழாவில் சாண்டோ கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவா்கள் பரிசுப் பொருள்களை பங்கேற்றவா்களுக்கு வழங்கினா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பாடலுக்கு ஏற்ற நடனம், பாரம்பரிய பரத நாட்டியம், கிறிஸ்துமஸ் தாத்தா நடனம், மற்றும் ஏசு கிறிஸ்து பிறப்பை உணா்த்தும் நாடகம் இடம்பெற்றன.

விழாவில் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு கேக் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com