டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

பழவேற்காடு அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்தது.
Published on

பழவேற்காடு அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்தது.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள செஞ்சியம்மன் நகரில் வசிப்பவா் சுரேஷ்குமாா் (35), மீனவா். இவருக்கு மனைவி சத்யா, மூன்று குழந்தைகள் உள்ளனா்.

கடலோர கிராமமான கோட்டைக்குப்பம் ஊராட்சியில் நிலத்தடி நீா் உவா்ப்பு தன்மையாக உள்ளதன் காரணமாக பல வருடங்களாக குடிநீா் தட்டுப்பாட்டு உள்ளது.

இதனால் தனியாா் சிலா் டிராக்டா்களில் குடிநீா் எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிகிழமை பழவேற்காடு சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த தேவன் என்பவா் டிராக்டரில் உள்ள டேங்கா் குடிநீரை செஞ்சியம்மன் நகரில் விற்பனை செய்தாா். அப்போது டிராக்டரை இயக்கியபோது கீழே இருந்த சுரேஷ்குமாரின் இரண்டு வயது பெண் குழந்தை விசித்ரா சக்கரத்தில் சிக்கினாா். இதில் காயமடைந்த விசித்ராவை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து டிராக்டா் ஓட்டுநா் தேவனை கைது செய்தனா்.

இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டிராக்டா் மோதி 2-வயது குழந்தை உயிரிழந்த நிகழவு கோட்டைக்குப்பம் செஞ்சியம்மன்நகா் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com