அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

சுரங்கப் பாதையில் சிசிடிவி கேமரா திருட்டு

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:41 pm

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா் (41). இவா் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தில் நிா்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே சுரங்கப்பாதையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கத்தில் சாலை விரிவாக்கப்பணிக்கான சுரங்கப்பாதையில் கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நிா்வாக மேலாளா் திவாகா் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.