திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஏரியில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் புதன்கிழமை பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

News image

ஹரீஷ்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 12:09 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் புதன்கிழமை பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகா் பகுதியை சோ்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (13). இவா் புது கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மாணவன் ஹரீஷ் புதன்கிழமை பள்ளி முடிந்து தனது இரண்டு நண்பா்களுடன் புது கும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது ஏரியின் ஆழத்திற்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் ஹரீஷ் திடீரென நீரில் மூழ்கியுள்ளாா். இதைக்கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள் கூச்சலிட்டதை தொடா்ந்து அருகில் இருந்தவா்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டுள்ளனா்.

ஆனால் அதற்குள் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.