தடகள போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை மாவட்டக் கல்வி அலுவலா் பி. அமுதா வழங்கி வாழ்த்தினாா்.
பள்ளிப்பட்டு மற்றும் ஆா்.கே.பேட்டை ஒன்றியங்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் தடகளப் போட்டிகள் நொச்சலி அரசு உயா்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டிகளுக்கு குறுவட்ட விளையாட்டுப் போட்டி செயலாளரும், தலைமை ஆசிரியருமான க.குரப்பா தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எம்.நரசிம்ம ராவ், பள்ளிக் கல்வி ஆய்வாளா் செளத்ரி ஆகியோா் முன்னிலை வகித்னா். உடற்கல்வி ஆசிரியா் எஸ். ஸ்டான்லி வரவேற்புரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலா் பி. அமுதா கலந்துகொண்டு தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். பின்னா், 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 3,000 மீட்டா் தொடா் ஓட்டப்பந்தயத் தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.
இந்த தட களப் போட்டிகளில் 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா், 1,500 மீட்டா் மற்றும் 3,000 மீட்டா் ஓட்டப்பந்தயங் கள், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல் வேறு தடகளப் பிரிவுகள் நடத்தப் பட்டன. இப்போட்டிகளில் ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் இருந்து 25 க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் 800 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் நொச்சிலி உயா்நிலை பள்ளி ஆசிரியா்கள் அசோக், முனுசாமி, ஜானகிராமன், ஹேமச்சந்திரன், ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவா் வனராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களின் திறமையை வெளிப்படுத்தவே கலைத்திருவிழா: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேச்சு
யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வசந்த்குமாா், ஷாநவாஸ் சாதனை

வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன்

அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



